“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி 

“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி 
“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி 

நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

வரும் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் சந்திக்கும் மகாராஷ்ட்ராவில் மோடி மற்றும் ராகுல்காந்தி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை ராஜினாமா செய்து 5 மாதங்கள் கழித்து தனது முதல் பரப்புரையை தொடங்கியுள்ளார் ராகுல்காந்தி. 

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பரப்புரையில் பேசிய ராகுல்காந்தி “நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது. இஸ்ரோவில் இருந்து ராக்கெட்டுகளை அனுப்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதமாக்கிகொள்கிறார் பிரதமர் மோடி.

வாகனத்துறை, ஜவுளித் துறை, வைர தொழில் ஆகியவை முடிந்துவிட்டன. ஆனால் நீங்கள் ஊடகங்களில் இது எதையும் காண முடியவில்லை. மோடி இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. 40 ஆண்டுகளில் தற்போது கடுமையான வேலையின்மை நிலவுகிறது. இளைஞர்கள் வேலை கேட்கும்போதெல்லாம், அரசாங்கம் நிலவை பார்க்கச் சொல்கிறது. அரசு சட்டப்பிரிவு 370 குறித்தும் நிலவை பற்றியும் பேசுகிறது. ஆனால் நாட்டை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து மவுனமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com