\
மகாராஷ்ட்டிராவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு !

மகாராஷ்ட்டிராவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு !

மகாராஷ்ட்டிராவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு !
Published on

மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் இன்று மேலும் 10,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று மேலும் 10,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,68,265 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 334 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,476 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 6,165 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,05,521 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 1,45,961 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com