\
பாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி

பாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி

பாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி
Published on

மகாராஷ்டிர மாநில முதல்வரின் மனைவி பாதுகாப்பை மீறி செல்ஃபி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 20ஆம் தேதி அங்கிரியா என்று பெயிரிடப்பட்ட இந்தியாவின் முதல் சொகுசு கப்பலின் பயணத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். இதில் பங்கேற்ற முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசின் மனைவி அம்ருதா, பாதுகாப்பையையும் மீறி கப்பலின் முனைக்கு சென்று செல்ஃபி எடுத்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கையையும் மீறி முதல்வரின் மனைவி செல்ஃபி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இதுபோன்று ஆபத்தான முறை செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாக கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com