சத்ரபதி சிவாஜி சிலைpt desk
இந்தியா
மகாராஷ்டிரா: மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கியது – காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு டிசம்பரில் திறந்து வைக்கப்பட்ட 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட்டில் மராட்டிய அரசர் சத்ரபதி சிவாஜியின் உருவ சிலையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த சிலை நேற்று சுக்கு நூறாக உடைந்தது. கடந்த மூன்று நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விழுந்து நொறுங்கிய சத்ரபதி சிவாஜி சிலைpt desk
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி சமூ வலைதளங்களில் பகிர்ந்து, பாஜக அவமதித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது. சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை என சரத்பவார் கட்சியினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.