மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகமுகநூல்

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக.. பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர்?

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் ஆர்த்தி சாத்தே நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஜூலை 28 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், அஜித் பகான்ராவ் கதேதங்கர், ஆர்த்தி அருண் சாத்தே மற்றும் சுஷில் கோதேஷ்வர் ஆகியோரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மகாராஷ்டிர அரசு செய்த பரிந்துரையின்பேரில், இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆர்த்தி அருண் சாத்தே என்பவர் 2023 ஆண்டு பாஜக செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு, கடுமையானம் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்த்தி சாத்தேவின் நியமனத்திற்கு மகாராஷ்டிராவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹித் பவார், ஆர்த்தி சாத்தே பாஜக செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இது ஜனநாயகம் மற்றும் நீதித்துறைக்கு ஒரு பெரிய அடியாக அமையும் என்று கூறியுள்ளார்.

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக
மஹுவா Vs கல்யாண் | ஒரே கட்சியின் எம்பிக்களிடையே வெடித்த மோதல்.. வார்த்தை போரால் சூடேறும் களம்!

ஆனால், இதுகுறித்து தெரிவித்துள்ள பாஜக தரப்பு, மகாராஷ்டிரா பாஜக ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் நவ்நாத் பங் , ஆர்த்தி சாத்தே பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்தது உண்மைதான், ஆனால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாத்தே அனைத்து கட்சிப் பதவிகளிலிருந்தும் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளது. அதாவது உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பே அவர் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டார் எனக் தெரிவித்துள்ளது .

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com