தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 81% பதிவு

தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 81% பதிவு
தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 81% பதிவு

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் தினசரி கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 40,715. இதில், இந்த 6 மாநிலங்களில் மட்டும் 80.90% பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24,645 பேரும், பஞ்சாபில் 2,299 பேரும், குஜராத்தில் 1,640 பேரும், தமிழகத்தில் 1,385 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 3,45,377 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 7,84,612 முகாம்களில்‌ 4,84,94,594 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று வரை 4 கோடிக்கும் அதிகமானோருக்கு (4,06,31,153) செலுத்தப்பட்டுள்ளது. 78,59,579 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 49,59,964 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 82,42,127 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 29,03,030 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 42,98,310 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 2,02,31,137 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,81,253 ஆக (95.67%) இன்று பதிவாகியுள்ளது.‌ கடந்த 24 மணிநேரத்தில் 29,785 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 199 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com