மகாராஷ்டிரா: அமைச்சர் மாதம் ரூ.100 கோடி கேட்டதாக முன்னாள் காவல் ஆணையர் புகார்!

மகாராஷ்டிரா: அமைச்சர் மாதம் ரூ.100 கோடி கேட்டதாக முன்னாள் காவல் ஆணையர் புகார்!
மகாராஷ்டிரா: அமைச்சர் மாதம் ரூ.100 கோடி கேட்டதாக முன்னாள் காவல் ஆணையர் புகார்!

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூலிக்குமாறு காவலர்களை கட்டாயப்படுத்தியதாக, மும்பை முன்னாள் காவல் ஆணையர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டினருகே வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. வெடிப்பொருட்களுடன் காரை நிறுத்தியதாக, மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சச்சின் வாஸியை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதையடுத்து மும்பை காவல் ஆணையராக இருந்த பரம் பீர் சிங், பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்க நிலையில் முதலமைச்சர் அலுவலகத்துக்கு அவர் அனுப்பியுள்ள இ-மெயிலில், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூலிப்பதற்கு நெருக்கடி தந்ததாக தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள பார்கள் மற்றும் ஹோட்டல்களிலிருந்து இந்த பணத்தை வசூலிக்குமாறு அமைச்சர் கூறியதாகவும், குறிப்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள சச்சியின் வாஸியை அழைத்து, பணத்தை வசூலிக்க உதவுமாறு கூறியதாகவும் இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் குறித்த புகார் வந்துள்ளதை உறுதி செய்துள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் அலுவலகம், ஆனால், அந்த மெயில், பரம் பீர் சிங்கின் அதிகாரபூர்வ இ-மெயிலிலிருந்து வரவில்லை என கூறியுள்ளது. இதனிடையே, பரம் பீர் சிங் மீது அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com