365 வழக்குகளை தீர்க்க உதவிய ‘ராக்கி’ நாய் மரணம் - சோகத்தில் மகாராஸ்டிரா போலீஸார்
நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராக்கி, தனது சகாக்களை தவிக்கவிட்டு காலமானது என பீட் போலீஸ் ராக்கியின் புகைப்படங்களுடன் ட்வீட் செய்துள்ளனர்.
மகாராஸ்டிராவின் பீட் போலீஸாருக்கு 365 வழக்குகளில் உதவிசெய்த ராக்கி என்ற நாய் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரிடமிருந்து விடைபெற்றது. இதை ட்விட்டரில் பதிவுசெய்த பீட் போலீஸார், நீண்ட காலம் ராக்கி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. 365 வழக்குகளைத் தீர்ப்பதில் போலீஸாருக்கு உதவியுள்ளது. ராக்கியின் மறைவால் போலீஸ் குடும்பமே மிகுந்த வேதனையடைந்துள்ளனர். துணிச்சலான நாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என ராக்கியின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் வெடிமருந்துகளைத் தேடுதல், ஆதாரங்களை கண்டுபிடித்தல், மக்களைத் தேடிக் கண்டுபிடித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு சில நாய்களை காவல்துறையினர் பயிற்சிக் கொடுத்து வைத்திருக்கின்றனர். மேலும் பிற சட்ட அமலாக்கப் பணிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.