ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்: டெல்லியில் அதிர்வுகள் பதிவு
ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதில் ஏற்பட்ட குறைந்த தீவிரம் கொண்ட நிலநடுக்கம் காரணமாக திங்கள்கிழமை இரவு டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டது.
ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 3.7 ரிக்டர் அளவில் இருந்ததாக ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமை இரவு 10.37 மணியளவில் ஜஜ்ஜருக்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், அதன் ஆழம் 5 கிலோமீட்டர் என்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பொதுமக்கள் பலரும் நிலநடுக்கம் காரணமாக தங்கள் வீடுகள் குலுங்கியதாகக் கூறிவருகின்றனர். புவியியல் கோடுகள் ரீதியாக டெல்லி, இனிவரும் காலங்களில் பெரிய பூகம்பங்களையும் சந்திக்கலாம் என்று புவியியலாளர்கள் கூறுகின்றனர். ஏப்ரல் 12 முதல், டெல்லி தேசிய தலைநகர் மண்டலம் (என்.சி.ஆர்) இரண்டு டஜன் நிலநடுக்கங்களை பதிவு செய்துள்ளது.