\
மாவோயிஸ்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குதல் - மதுரை வீரர் உயிரிழப்பு

மாவோயிஸ்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குதல் - மதுரை வீரர் உயிரிழப்பு

மாவோயிஸ்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குதல் - மதுரை வீரர் உயிரிழப்பு
Published on

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சண்டையின் போது, இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த வீரர் பாலுச்சாமி உயிரிழந்தார்.

மதுரை பொய்கைக்கரைப் பட்டியைச் சேர்ந்த லஷ்மணனின் மூன்றாவது மகனான பாலுச்சாமி, கடந்த 14 ஆண்டுகளாக இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியில் இருந்த அவர், மாவோயிஸ்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழந்தார்.

31 வயதான பாலுச்சாமிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. பாலுச்சாமியின் மறைவால் பொய்கைக்கரைப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com