\
தேசிய கீதம் பாடிய மாணவர்களை தடுத்த மதராஸா ஆசிரியர் கைது!

தேசிய கீதம் பாடிய மாணவர்களை தடுத்த மதராஸா ஆசிரியர் கைது!

தேசிய கீதம் பாடிய மாணவர்களை தடுத்த மதராஸா ஆசிரியர் கைது!
Published on

தேசிய கீதம் பாடிய மாணவர்களை தடுத்து நிறுத்திய மதராஸா ஆசிரியர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது மகராஜ்கஞ்ச் மாவட்டம். இங்குள்ள கோல்குரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், மதராஸா ஒன்று உள்ளது. இங்கு நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது தேசிய கொடி ஏற்றிய பின் மாணவர்களும் ஆசிரியர்களும் தேசிய கீதம் பாட முயன்றனர்.

அப்போது மூன்று அசிரியர்கள், மாணவர்கள் தேசிய கீதம் பாடுவதை தடுத்து நிறுத்தினர். அங்குள்ள மற்றவர்கள் பாட முயன்றபோதும் அந்த ஆசிரியர் தடுத்து நிறுத்தினார். இது தொடர்பான வீடியோ நேற்று வைரலானது. 

இதையடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட் அமர்நாத் உபாத்யா இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த மூன்று ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்ற ஆசிரியர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com