
மத்தியபிரதேசத்தில் டிராபிக் போலீஸ் ஒருவர் பொதுமக்கள் மத்தியில் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் கிவைலர் என்ற பகுதியில் உள்ள கடை ஒன்றில் நின்று கொண்டிருக்கும் டிராபிக் போலீஸ், அங்குள்ள ஒருவரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவரிடம் சாவியை கொடுக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.