மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம்fb

36 முறை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட கணவன்; சடலத்தை வீடியோ காலில் காட்டிய மனைவி !

மத்திய பிரதேசத்தில் தனது கணவனை 36 முறை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த மனைவி, அந்த சடலத்தை வீடியோ காலில் காட்டிய கொடூரம் நடந்தேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 25) என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 17 வயதான மைனர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த பெண் யுவராஜ் என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் இந்த ரகசிய காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இதற்கு இடையூறாக இருந்த தனது கணவன் ராகுலை இவரும் சேர்ந்து தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் , சம்பவதினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, தனது கணவர் ராகுலுடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்த அப்பெண் , செருப்பு கழன்று விட்டதாக கூறி பைக்கை நிறுத்தியுள்ளார்.

அப்போது, தக்கசமயம் பார்த்து மறைந்திருந்த யுவராஜின் நண்பர்கள் இருவர் ராகுலை பீர் பாட்டில் கொண்டு தாக்கியுள்ளனர். இப்படி 36 முறை குத்தியுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதன்பிறகு கணவன் இறந்ததை உறுதிசெய்த அப்பெண், தனது காதலன் யுவராஜ்க்கு வீடியோ கால் செய்து சடலத்தை காட்டியுள்ளார்.

இந்தநிலையில், ராகுல் மற்றும் அவரது மனைவி காணவில்லை என இவர்களது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில், தீவிர சோதனை வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்
Headlines|அவசர சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ள மத்திய அரசு முதல் CSK அணியில் இணைந்த இளம் வீரர் வரை!

அப்போது, இந்தூர்-இச்சாபூர் நெடுஞ்சாலையில் ஐடிஐ கல்லூரிக்கு முன்னால் உள்ள பிரதான சாலைக்கு அருகிலுள்ள ஒரு புதரில் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ராகுலின் மனைவி, அவரது கள்ளக்காதலன் யுவராஜ் மற்றும் யுவராஜின் நண்பர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com