'கல்யாணத்தைப் பண்ணிப்பார்’ முழு விவரத்துடன் இ-ரிக்‌ஷாவில் பேனர் வைத்து மணப்பெண் தேடும் ம.பி. இளைஞர்!

மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், இ-ரிக்‌ஷாவின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் விளம்பர பேனரைப் பொருத்தி, அதன்மூலம் மணப்பெண்ணைத் தேடி வருகிறார்.
திபேந்திரா ரத்தோர்
திபேந்திரா ரத்தோர்ட்விட்டர்

’வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என ஒரு சொலவடை உண்டு. ஏனெனில் அது இரண்டையும் அவ்வளவு எளிதாகச் சீக்கிரத்தில் முடியாது. அதிலும், கல்யாணம் என்பது சாதாரண விஷயமல்ல. இன்று காலம் மாறிப் போயிருந்தாலும் கல்யாணம் என்று எடுத்துக் கொண்டாலே பிரச்னைகளும் சிக்கல்களும் நீடிக்கத்தான் செய்கின்றன. அதிலும் கல்யாணத்தின் முதல் தேடலாய்ப் பெண் பார்க்கும் படலம்தான், இன்றைய பல இளைஞர்களுக்குச் சோதனையாக அமைகிறது.

என்னதான் படித்து வேலையிலிருந்தாலும் வசதி வாய்ப்புடன் இருந்தாலும் பொருத்தமான பெண் கிடைப்பதில்லை. இதனால், அவர்கள் பெண் தேடித்தேடியே வெறுப்புற்று விடுகின்றனர். இதற்காக விளம்பரங்கள் செய்தும் எந்தப் பிரயோசனமுமில்லை. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்துள்ளார். அவர் இதற்காக மேட்ரிமோனியத்தையோ அல்லது நாளிதழ்களிலேயோ விளம்பரம் கொடுக்கவில்லை. அதுகுறித்த சுவையான செய்தியை இங்கு பார்ப்போம்.

மத்தியப் பிரதேசம் தாமோவைச் சேர்ந்தவர் திபேந்திரா ரத்தோர். 29 வயதான இவர், சொந்தமாக இ-ரிக்‌ஷா வைத்து தொழில் செய்து வருகிறார். இவர்தான் தனது குறிப்புகளை பேனராய் அடித்து இ-ரிக்‌ஷாவின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் பொருத்தி, அதன்மூலம் மணப்பெண்ணைத் தேடி வருகிறார். அவர் வைத்துள்ள அந்த விளம்பரத்தில் அவரைப் பற்றிய உயரம், பிறந்த தேதி, நேரம், ரத்தப் பிரிவு, கல்வித் தகுதி, அவரது இனம் மதம் உட்பட எல்லாவற்றையும் குறிப்பிட்டுள்ளார். இந்த வகை முறையில் அவர் பெண் தேடும் படலத்தில் இறங்கியிருப்பது அங்குள்ளோரை வரவேற்க வைத்துள்ளது.

இதுகுறித்து அவர், ’சமுதாயத்தில் பெண்கள் குறைவாக இருப்பதால் தனக்கு மணமகள் கிடைக்கவில்லை. எனது பெற்றோரும் அவர்களுடியா வழிபாட்டில் மும்முரமாக இருக்கின்றனர். அதனால் அவர்கள் பெண்ணைத் தேடவில்லை. மேலும், திருமணக் குழுவில் சேர்ந்தாலும் தமக்கு ஊரில் இருந்து மணப்பெண் கிடைக்கவில்லை. இதன்காரணமாகவே தமக்கொரு மணப்பெண் கேட்டு பேனர் அமைத்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com