”சிவிங்கிப் புலிகளுக்கு சரியான கவனிப்பு இல்லை..” - உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதிய நிபுணர்கள்!

”குனோ தேசியப் பூங்காவில் சிவிங்கிப் புலிகளுக்கு சரியான கவனிப்பு இல்லை” என வெளிநாட்டு நிபுணர்கள் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சிவிங்கிப் புலி, உச்சநீதிமன்றம்
சிவிங்கிப் புலி, உச்சநீதிமன்றம்ட்விட்டர்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேசம் குனோ தேசியப் பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் விடுவிக்கப்பட்டன. அதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில், 5 பெரிய சிறுத்தைகளும் 3 குட்டிகளும் குனோவில் இறந்துவிட்டன. இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு சிவிங்கிப் புலி திட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் தளர்த்தியது.

அதிலிருந்து உச்சநீதிமன்றம் இத்திட்டத்தைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இறந்துபோன சிவிங்கிப் புலிகளில் தேஜஸ் மற்றும் சூரஜ் இரண்டு ஆண் புலிகளுக்கு கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த ரேடியோ பட்டி ஏற்படுத்தியிருந்த புண்ணே காரணம் என்று தென் ஆப்பிரிக்க விலங்கு நல சிறப்பு மருத்துவர் ஆட்ரியன் டோர்டிஃப் கடிதம் எழுதியிருக்கிறார். மருத்துவர் லாரி மார்க்கரும் இதுபோன்ற கடிதம் ஒன்றை உச்சநீதிமன்றத்துக்கு எழுதியுள்ளார்.

குனோ தேசியப் பூங்காவில் இருப்பவர்கள் நிபுணர்களுடன் சரியான தொடர்பை வைத்துக்கொள்வதும், நிபுணர்களை நம்புவதும், அவர்களை நம்பி தொடர்ந்து தகவல்களைத் தருவதும் அவசியமானது’ என்று கூறியுள்ளார்.

மேலும், ’தற்போது குனோ தேசியப் பூங்காவில் சிவிங்கிப் புலிகளைப் பார்த்துக் கொள்பவர்கள் சரியான பயிற்சி இல்லாதவர்கள்’ என்றும் தென் ஆப்பிரிக்க நிபுணர்களின் அபிப்ராயங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மேலோட்டமாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவதாகவும் புகார் அளித்துள்ளனர்.

cheetah
cheetahFile Image

’சிவிங்கிப் புலிகள் திட்டம் தோல்வியடையுமானால், இதுபோன்ற மற்ற முயற்சிகளை யாரும் முன்னெடுக்க மாட்டார்கள் என்றும் சரியான ஆரோக்கிய நிலைகளைத் தெரியப்படுத்தினால்தான் அனைவரும் சேர்ந்து சிவிங்கிப் புலிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கமுடியுமென்பதைத் தீர்மானிக்க இயலும்’ என்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவர்கள் தேசிய சிவிங்கிப் புலி திட்டத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்கள்.

மார்ச் 27ஆம் தேதி சாஷா என்னும் முதல் சிவிங்கிப் புலி சிறுநீரகக் கோளாறால் மரணத்தைத் தழுவிய பிறகு துயரங்கள் தொடர்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com