\
மத்திய பிரதேச அரசு வேலைகள் உள்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே - சிவராஜ் சிங் சவுகான் !

மத்திய பிரதேச அரசு வேலைகள் உள்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே - சிவராஜ் சிங் சவுகான் !

மத்திய பிரதேச அரசு வேலைகள் உள்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே - சிவராஜ் சிங் சவுகான் !
Published on: 

அரசு வேலைகள் மத்திய பிரதேச மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

அம்மாநில சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் "அரசு வேலைகளில் மத்தியப் பிரதேச மாநில இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். மாநிலங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதனை மாநில இளைஞர்களுக்கே வழங்கப்படும். இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

மேலும் " 10வது மற்றும் 12ஆவது வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாநில இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்படும். இது தொடர்பாக அனைத்துவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார் சிவராஜ் சிங் சவுகான்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com