இந்தியா
அலுவலக நேரத்தில் திரைப்பாடலுக்கு நடனமாடிய அரசு ஊழியர்கள்
அலுவலக நேரத்தில் திரைப்பாடலுக்கு நடனமாடிய அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள் தங்கள் பணிநேரத்தில் அலுவலகத்தில் திரைப்பட பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸில் உள்ள அரசு அலுவலகத்தில், அதிகாரி ஒருவரின் பிறந்தநாளை ஊழியர்கள் கொண்டாடி உள்ளனர். அப்போது பணி நேரம் என்றும் பாராமல் அரசு அலுவலகத்தின் கதவை உட்புறமாக அடைத்துவிட்டனர். பின்னர் ‘பாக் மில்கா பாக்’ என்ற இந்திப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹவன் கரேங்கே' என்ற பாடலுக்கு நடனம் ஆடினர்.
அதைத்தொடர்ந்து "பண்டி அவுர் பப்ளி" இந்திப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கஜ்ராரே' பாடலுக்கு ஆட்டம் போட்டனர்.
இந்த கொண்டாட்டத்தை அங்கிருந்த ஊழியர் ஒருவர் வீடியோவாக பதிவுசெய்துள்ளார். செல்போனில் பதிவு செய்யப்பட்ட அந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.