\
மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் காலமானார்

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் காலமானார்

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் காலமானார்
Published on: 

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி தாண்டனுக்கு வயது 85. லால்ஜி தாண்டன் உயிரிழந்த செய்தியை அவரது மகன் அஷுதோஸ் தாண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “லால்ஜி தாண்டன் கடந்த ஜூன் 11 அன்று மருத்துவமனையில் சுவாசப் பிரச்னைகள், சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டார். லால்ஜி தாண்டனுக்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவர் வெண்டிலேட்டரில் மருத்துவர்கள் மேற்பார்வையில் இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கொரோனா நெகட்டிவ் இருந்தது” எனத் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com