ம.பி. வெள்ளம்: தாமதமாக பார்வையிட சென்றதாக மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டம்

ம.பி. வெள்ளம்: தாமதமாக பார்வையிட சென்றதாக மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டம்
ம.பி. வெள்ளம்: தாமதமாக பார்வையிட சென்றதாக மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஷியோப்பூரில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் வாகன அணிவகுப்பைத் தடுக்க முயன்ற பொதுமக்கள், அவருக்கு கருப்புக் கொடி காட்டி வாகனத்தின் மீது சேற்றை வீசி போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர் தாமதமாக பாதிப்பை ஆய்வு செய்ய வந்ததாகக் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

தோமரை ஷியோப்பூர் நகரத்தின் முக்கிய சந்தையில் உள்ளே நுழையவிடாமல் மக்கள் தள்ளிக் கொண்டு செல்ல முயன்றனர். இது குறித்து, “ அரசின் தவறான நிர்வாகம் காரணமாக, அம்ரல் மற்றும் சீப் ஆற்றில் வெள்ள பாதிப்பு அதிகமானது. வெள்ளம் குறித்து சரியான நேரத்தில் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்வில்லைஎன்று பொதுமக்கள் தோமரிடம் புகார் செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் குவாலியர்-சம்பல் பிராந்தியத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்இந்த எட்டு மாவட்டங்களில் 1,250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 9,000 மக்கள் மிக மோசமான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com