மத்தியப் பிரதேசம்: பாஜக வெற்றி.. முதல்வர் ரேஸில் யார்? ஓரங்கட்டப்படுவாரா சிவராஜ் சிங் சவுகான்?

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நிலவரப்படி, பாஜக முன்னிலையில் உள்ளது.
சிவ்ராஜ் சிங் சவுகான்
சிவ்ராஜ் சிங் சவுகான்ட்விட்டர்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும், இன்று (டிச.3) காலை முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மிசோரமில் மட்டும் நாளை (டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நிலவரப்படி, பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதியை வீழ்த்தி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றுள்ள நிலையில், சிவராஜ் சிங் சவுகானே மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிக்க: "சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் இதுதான் விளைவு" - காங். தோல்வி குறித்து வெங்கடேஷ் பிரசாத் காட்டம்

4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மாற்ற மாநில முடிவுகளில் இருந்து மிகவும் தனித்து தெரிவது மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள்தான். மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் மூன்றில் இரு பங்கு இடங்களை கைப்பற்றி பாஜக அழுத்தம் திருத்தமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இடையில் ஒன்றே கால் ஆண்டுகள் தவிர தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் மகுடம் சூடி வந்த பாஜக மேலும் 5 ஆண்டுகளுக்கு அதை உறுதி செய்துள்ளது. ஆட்சிக்கு எதிரான மனநிலை, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்னைகளை தாண்டி வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் சிவராஜ் சிங் சவுகான்.

பெண்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் தரும் சிவராஜ் சிங் அரசின் திட்டம் தேர்தல் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்ததாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். இது தவிர 3 மத்திய அமைச்சர்கள் உட்பட 7 மக்களவை உறுப்பினர்களை சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறக்கியது போன்ற வித்தியாசமான வியூகங்களும் கூட பாஜகவுக்கு பலன் அளித்துள்ளது.

இருப்பினும், சிவராஜ் சிங் சவுகானை முதலமைச்சர் வேட்பாளர் ஆக முன்னிறுத்தாமல் தேர்தலைச் சந்தித்தது பாஜக. பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தியே பாஜகவின் பரப்புரைகள் அமைந்தன. இதனால் சிவராஜ் சிங் சவுகான் ஓரம் கட்டப்படுகிறாரா என்று கூட அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் தற்போது சவுகானின் தலைமையில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது பாஜக. இதற்கு பரிசாக சவுகானுக்கே முதலமைச்சர் பதவியை பாஜக தருமா அல்லது நரேந்திர சிங் தோமர் போன்ற மூத்த தலைவர்களில் ஒருவருக்கு அப்பதவி செல்லுமா என்ற சுவாரசியமான கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர்.. 3 மாநிலங்களில் அபார வெற்றி.. உற்சாக கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com