4 ரூபாய் நஷ்ட ஈடு அளித்த ம.பி. அரசு - விவசாயிகள் அதிர்ச்சி
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 2 விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா என்ற திட்டத்தின் கீழ், ஒருவருக்கு 17.46 பைசாவும், மற்றொரு விவசாயிக்கு 4.70 பைசாவும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பிரதமர் மோடி, பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இது பயிர் காப்பீட்டு திட்டத்தில் அளிக்கப்படும் நஷ்ட ஈடு தொகை ஆகும். பல்வேறு காரணங்களால் பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் நஷ்டஈடு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 2 விவசாயிகளுக்கு, நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 17.46 பைசாவும், மற்றொரு விவசாயிக்கு 4.70 பைசாவும் நஷ்ட வழங்கப்பட்டுள்ளதை கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தங்களுக்கு முழு நஷ்டஈட்டு தொகை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.