மத்திய பிரதேசத்தில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் பகுதியைச் சேர்ந்த 15வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை செய்ததாக கூறப்படும் இருவர் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு
வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவம் கடந்த மாதம் மத்தியபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய 19வயது மாணவியை நான்கு பேர் கொண்ட
கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.