”பாபாகா தாபா” தாத்தா பரபரப்பு புகார்... யூட்யூபர்-க்கு  ஆதரவாக நடிகர் மாதவன் ட்வீட்

”பாபாகா தாபா” தாத்தா பரபரப்பு புகார்... யூட்யூபர்-க்கு ஆதரவாக நடிகர் மாதவன் ட்வீட்

”பாபாகா தாபா” தாத்தா பரபரப்பு புகார்... யூட்யூபர்-க்கு ஆதரவாக நடிகர் மாதவன் ட்வீட்

டெல்லி “பாபா கா தாபா” கடை உரிமையாளர், அவரை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கவுரவ் வாசன் மீது 25 இலட்ச ரூபாய் மோசடி குற்றச்சாட்டை வைத்துள்ளார், இந்நிலையில் நடிகர் மாதவன் கவுரவ் வாசனுக்கு ஆதரவாக டிவீட் செய்துள்ளார்.

நடிகர் மாதவன் தற்போதைய “பாபா கா தபா” சர்ச்சையில் யூடியூபர் கவுரவ் வாசனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். கவுரவ் வாசன் ஒரு அற்புதமான வேலை செய்துள்ளார், இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என்றால் நாம் அவரை இன்னும் பாராட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். நடிகர் மாதவன் தனது ட்வீட்டில் “கவுரவ் வாசன் அந்த வயதான தம்பதியினரின் அவல நிலையை முன்னிலைப்படுத்தியதன் மூலம் அற்புதமான பணியை செய்துள்ளார். அவர் மீதான இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றால், நாம் அவரை இன்னும் அதிகமாகப் பாராட்ட வேண்டும். இதனால் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வெளியே வருபவர்கள் தங்கள் மீது சவாரி செல்வதைப் போல உணரக்கூடாது” என தெரிவித்துள்ளார்

யூடியூபர் கவுரவ் வாசன் தனது சமூக ஊடக கணக்குகளில் “பாபா கா தாபா”வை நடத்தும் வயதான தம்பதியினருக்கு உதவ முன்வருமாறு வீடியோ வெளியிட்டு வலியுறுத்தினார். அந்த வீடியோ வைரலாகி பலர் அந்த முதியவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் பாபா கா தாபாவைப் பார்வையிட்டனர். சமீபத்தில், தாபாவின் உரிமையாளர் காந்தா பிரசாத், கவுரவ் வாசன் தனக்கு கிடைத்த முழுத் தொகையையும் தனக்கு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த கவுரவ் வாசன் “ இவை ஆதாரமற்ற, தவறான மற்றும் எதிர்மறை குற்றசாட்டு' என்று கூறினார். மேலும் "என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். எனது கணக்கிற்கு ரூ .25 லட்சம் தொகை வந்ததாக வதந்திகள் மற்றும் தகவல்கள் வந்துள்ளன, இது உண்மையல்ல, ஏனென்றால் எனது அனைத்து வங்கி பண பரிமாற்ற அறிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாக கொடுத்துள்ளேன்” என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com