இந்தியா
" நாட்டின் சிறந்த முதல்வராக செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின்" - குலாம்நபி ஆசாத்
" நாட்டின் சிறந்த முதல்வராக செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின்" - குலாம்நபி ஆசாத்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாட்டின் சிறந்த முதல்வராக செயல்பட்டு வருகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். பின்னர் பேசிய குலாம் நபி ஆசாத், கொரோனா சூழல் காரணமாக சென்னை வர முடியாத சூழல் இருந்ததாக கூறினார். மேலும், நாட்டின் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் கடுமையான உழைப்பாளி எனவும் புகழாரம் சூட்டினார். இந்த சந்திப்பின்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், டி.கே.எஸ்.இளங்கோவனும் உடனிருந்தனர்.

