இந்தியாவில் அதிகரிக்கும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு - தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் அதிகரிக்கும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு - தமிழகம் எத்தனையாவது இடம்?
இந்தியாவில் அதிகரிக்கும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு - தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2022-ம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 5.2% அதிகரித்திருப்பது மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, 2022-ம் ஆண்டில் நாடு முழுவதும் 14,61,427 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தியாவில் அதிக பட்சமாக உத்திரபிரதேச மாநிலத்தில் 2,10,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் 93,536 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்பில் அதிக பாதிப்பு உள்ள 5-வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 2020-ம் ஆண்டில் 98,278 பேருக்கும், 2021-ம் ஆண்டில் 1 லட்சத்து 792 பேருக்கும் இருந்த நிலையில், 2022-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 371 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022-ம் ஆண்டில் 5.2% பேர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com