“தம்பி எழுந்திருப்பா விடிஞ்சிருச்சு” - திருடச் சென்ற இடத்தில் ஏசி போட்டு ஜம்முனு தூங்கிய திருடன்!

திருட சென்ற இடத்தில் ஏசியை ஆன் செய்து சொகுசாக தூங்கிய திருடன், பொழுது விடிஞ்சாச்சி தூங்கினது போதும் என்று எழுப்பிய போலிசார்.
தூக்கத்தில் திருடன்
தூக்கத்தில் திருடன்கூகுள்
Published on

திருட சென்ற இடத்தில் ஏசியை ஆன் செய்து சொகுசாக தூங்கிய திருடன், 'பொழுது விடிஞ்சாச்சி தூங்கினது போதும் தம்பி' என்று எழுப்பிய போலிசார்.

உத்திர பிரதேஷ் லக்னோ மாநிலத்தில் இந்திரா நகர் என்ற ஏரியாவைச் சேர்ந்தவர் டாக்டர் சுனில் பாண்டே. இவர் வாரணாசியில் பணிபுரிந்து வருவதால், இந்திரா நகரில் உள்ள இவரது வீட்டை பூட்டி வைத்துள்ளார்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு, முழு போதையில் இருந்த ஒருவர் சுனில் பாண்டேவின் வீட்டில் திருட நினைத்து வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளாட். போதையும், தூக்கமும் சேர்ந்து வர திருடன் சற்று ரெஸ்ட் எடுத்துவிடலாம் என நினைத்து அங்கிருந்த ஏசியை ஆன் செய்து, தலைக்கு சொகுசாக அருகில் இருந்த குஷனை எடுத்து தலையணையாக வைத்துக்கொண்டு மொபைல் பார்த்தப்படி தரையில் படுத்துள்ளார் அந்த திருடர்.

படுத்த சிறிதுநேரத்திலேயே தூங்கவும் ஆரம்பித்துள்ளார். பொழுதும் விடிந்து, சூரியனும் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.

பக்கத்து வீட்டிலிருப்பவர்கள், பூட்டியிருந்த சுனில் பாண்டேவின் வீடு திறந்து கிடந்ததைப்பார்த்ததும், ஒரு சந்தேகத்தில் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போன் எடுக்காத நிலையில், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஒருவர் ஏசியைப் போட்டுக்கொண்டு தூங்கியதைக்கண்டு உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், போதையில் தூங்கிய திருடனை மிகவும் கஷ்டப்பட்டு எழுப்பி, கைது செய்துள்ளதாக பிரபல பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com