சகோதரன், தாயை சுட்டுக்கொன்ற சிறுமி : நாவலின் கற்பனையால் விபரீதம்
நாவலில் வரும் கதாபாத்திரமாக தன்னை நினைத்துக்கொண்டு சிறுமி ஒருவர் தாய், சகோதரனை சுட்டுக்கொன்ற கொடூரம் லக்னோவில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சிறந்த மாணவியாகவும், தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் வீரராகவும் உள்ளார். இவர் சீன எழுத்தாளரான ஒசமு டசாய் எழுதிய ‘நோ லாங்கர் யூமன்’ என்ற நாவலை விரும்பிப் படித்துள்ளார். அந்த நாவலில் மூழ்கிய அவர், அதில் வரும் ஒரு கதாபாத்திரமாக தன்னை நினைத்துக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதிய உணவிற்குப் பின்னர் அச்சிறுமியின் தாய் மற்றும் சகோதரன் தூங்கியுள்ளனர். அப்போது குளியலறைக்கு சென்ற அப்பெண், அங்கிருந்த கண்ணாடியில் தான் ஒரு தகுதியற்ற மனிதர் என தக்காளி சார்ஸைக் கொண்டு எழுதியுள்ளார். பின்னர் வெளியே வந்த அச்சிறுமி தனது பயிற்சி துப்பாக்கியைக் கொண்டு கண்ணாடியை சுட்டுள்ளார். பின்னர் தனது சகோதரன் மற்றும் தாயை சுட்டுக்கொன்றுள்ளார்.
அச்சிறுமியை கைது செய்த போலீஸார், அவரை மனநல ஆலோசகர் உதவியுடன் விசாரித்தனர். அதில் தனது தாயையும், சகோதரனையும் கொலை செய்ததை அச்சிறுமி ஒப்புக்கொண்டார். அத்துடன் தன்னை அந்த நாவலின் கதாபாத்திரம் எனவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.