உயிருக்கு போராடிய தந்தை.. தீவிர சிகிச்சைப் பிரிவில் மகளுக்கு திருமணம்! சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சினிமா காட்சிகளை போல், தீவிர சிகிச்சை அரங்கில் திருமணம் நடைபெற்றுள்ளது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் திருமணம்
தீவிர சிகிச்சைப்பிரிவில் திருமணம்புதிய தலைமுறை

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சினிமா காட்சிகளை போல், தீவிர சிகிச்சை அரங்கில் திருமணம் நடைபெற்றுள்ளது.

லக்னோ சவுக் பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இக்பாலின் மகள் திருமணம் நடைபெற சில நாட்களே இருந்த நிலையில் அவரது
உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் மகள் திருமணத்தை தனது முன்னிலையில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் திருமணம்
ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்ட இஸ்லாமியர்கள்.. பக்ரீத் பண்டிகையை ஒட்டி சிறப்புத் தொழுகை!

இதனையடுத்து இக்பாலின் முன்னிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் தீவிர சிகிச்சை அரங்கிலேயே அவரது மகள் திருமணத்தை  நடத்த குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இதற்கு மருத்துவமனை நிர்வாகமும் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இக்பாலின்
முன்னிலையில் அவரது மகள் திருமணம் நிக்கா எனப்படும் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது.

அப்போது மருத்துவர்களும், உறவினர்களும் உடனிருந்தனர். தந்தையின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக தீவிர சிகிச்சை அரங்கில் மகளின் திருமணம் நடத்தப்பட்டது. இது
தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com