மோசமான வரிகள்: ஆட்டோக்களில் பாடல் ஒலிபரப்ப லக்னோவில் தடை!

மோசமான வரிகள்: ஆட்டோக்களில் பாடல் ஒலிபரப்ப லக்னோவில் தடை!

மோசமான வரிகள்: ஆட்டோக்களில் பாடல் ஒலிபரப்ப லக்னோவில் தடை!
Published on

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதால், லக்னோவில் ஆட்டோக்களில் பாடல்கள் ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் விதமாக, பல நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. இந்நிலையில், லக்னோ நகரில் ஆட்டோ, மற்றும் டெம்போக்களில் பாடல்கள் ஒலிபரப்பப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி லக்னோவின் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் கைலாஷ் நைதானி கூறும்போது, ’’ பாடல்களில் அநாகரிக மான வார்த்தைகள் இடம்பெறுகின்றன. இது அனைவருக்கும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பெண்களுக்கு சிக் கலை ஏற்படுத்துகிறது. சத்தமாக பாடல்களை ஒலிபரப்புவதன் மூலம் வயதானவர்களும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால், அனைத்து விதமான ஆட்டோ மற்றும் டெம்போக்களில் பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது என்று உத்தரவிட்டுள் ளோம். பாடல்கள் ஒலிபரப்பும் கருவிகளையும் அதில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளோம். இந்த திட்டம் படிப் படியாக அடுத்தடுத்த நகரங்களுக்கும் விரிவாக்கப்படும்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com