\
சமையல் காஸ் விலை உயர்வு

சமையல் காஸ் விலை உயர்வு

சமையல் காஸ் விலை உயர்வு
Published on: 

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலையும் 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்படி சென்னையில் மானிய சிலிண்டரின் விலை 479 ரூபாய் 11 காசுகளாக இருக்கும். மானியமல்லாத சிலிண்டர் ஒன்றின் விலை 656 ரூபாய் 50 காசுகளாக இருக்கும். இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4 ரூபாய் வரை உயர்த்தப்படும் என கடந்த ஜூலை மாதம் பெட்ரோலியத்துறை அறிவித்தது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com