காதலிக்க மறுத்த மாணவியை எரித்து தானும் தற்கொலை செய்த காதலன்..!

காதலிக்க மறுத்த மாணவியை எரித்து தானும் தற்கொலை செய்த காதலன்..!

காதலிக்க மறுத்த மாணவியை எரித்து தானும் தற்கொலை செய்த காதலன்..!
Published on

காதலிக்க மறுத்த மருத்துவ மாணவி தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழ்ந்‌துள்ளது.

கோட்டயத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், வகுப்பறையில் இருந்த மாணவி ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். பின்னர் அந்த இளைஞரும் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மாணவியைக் காப்பாற்ற முயன்ற சகமாணவிகள் சிலருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.

இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட இளைஞர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே கல்லூரியில் பயின்ற ஹர்ஷத் என்பது தெரியவந்துள்ளது. அவரின் காதலை முதலில் ஏற்றுக்கொண்ட மாணவி பின்னர் குடும்பத்தினரின் நிர்பந்தம் காரணமாக காதலனை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியை பின்தொடர்ந்து வந்த இளைஞர் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com