ஒருதலைக் காதல் சண்டையில் சக மாணவனை கத்தியால் குத்திய நண்பன்

ஒருதலைக் காதல் சண்டையில் சக மாணவனை கத்தியால் குத்திய நண்பன்
ஒருதலைக் காதல் சண்டையில் சக மாணவனை கத்தியால் குத்திய நண்பன்

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை அவரது நண்பரும், 10ஆம் வகுப்பு மாணவனுமான மற்றொருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் அரசு உதவியின் கீழ் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் நேற்று காலை வழக்கம்போல இறைவாழ்த்து முடிந்து மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் ஏதோ பேசிக்கொண்டிருந்துள்ளனர். திடீரென அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். அப்போது அவர்களில் ஒரு மாணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மற்றொரு மாணவரை குத்தியுள்ளார்.

ஆறு இடங்களில் குத்துப்பட்ட அந்த மாணவர், ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அந்த மாணவரை உடனே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தற்போது அந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவலின்படி, சண்டை போட்டுக்கொண்ட இரண்டு மாணவர்கள் நெருங்கிய நண்பர்கள். கடந்த ஆண்டு இருவரும் ஒன்றாக 10ஆம் வகுப்பு படித்துள்ளனர். இதில் ஒருவர் தேர்ச்சி பெற்று 11ஆம் வகுப்பு வந்துவிட்டார். ஆனால் மற்றொரு மாணவர் தோல்வியடைந்து தற்போது 10ஆம் வகுப்பே படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் படிக்கும்போது அதேவகுப்பில், ஒரே பெண்ணை காதலித்துள்ளனர். இதனை அந்தப் பெண்ணிடம் தெரிவிக்கமால் இருவரும் நண்பர்கள் போல பழகியுள்ளனர். இந்நிலையில் தான் ஒருவர் தேர்வில் தோல்வியடைந்து, பிரிந்துவிட்டார். இந்நிலையில் இருவரும் அந்தப்பெண்ணை காதலிப்பது, அவர்களுக்குள் தெரியவந்துள்ளது. இதனால் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் 10ஆம் வகுப்பில் இருக்கும் மாணவன் குறித்து அந்தப் பெண்ணிடம், 11ஆம் வகுப்பு மாணவன் ஏதோ குறைகளை கூறியதாக சக நண்பர்கள் இருவருக்குள்ளும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிரச்னையின் முடிவில் தான், ஒரு மாணவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com