கணவரை கொலை செய்து காதலனை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்ற முயற்சித்த மனைவி

கணவரை கொலை செய்து காதலனை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்ற முயற்சித்த மனைவி

கணவரை கொலை செய்து காதலனை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்ற முயற்சித்த மனைவி
Published on

 தெலங்கானாவில் கணவரை கொலை செய்து காதலனை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கணவர் போலவே மாற்ற முயற்சித்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானாவை சேர்ந்தவர்கள் சுதாகர் ரெட்டி - சுவாதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுவாதிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ராஜேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுவாதியும் அவரது காதலனும் சேர்ந்து சுதாகர் ரெட்டியை கொலை செய்துள்ளனர். சடலத்தை அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்துவிட்டனர். இதன் பின்னர் தனது காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்த சுவாதி. பிரபல தெலுங்கு பட பாணியை பின்பற்றியுள்ளார். அல்லு அர்ஜூன், ராம் சரண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் எவடு. இந்தப்படத்தில் ராம் சரணை கொலை செய்துவிட்டு அல்லு அர்ஜூன் முகத்தில் ஆசிட் வீசி விட்டு ராம் சரண் போல் நடிப்பார். அதே பாணியை சுவாதி இச்சம்பவத்தில் பின்பற்றியுள்ளார்.

தனது காதலன் ராஜேஷ் முகத்தில் சுவாதியே திராவகத்தை ஊற்றி சிறிது காயத்தை ஏற்படுத்தினார். பின்னர் தனது கணவர் சுதாகர் ரெட்டி குடும்பத்தினரை தொடர்பு கொண்ட சுவாதி கணவரின் முகத்தில் சிறிது காயம் ஏற்பட்டுவிட்டதாகவும் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி பணத்தை பெற்றுள்ளார். பின்னர் தனது காதலன் ராஜேஷை மருத்துவமனையில் அனுமதித்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

மருத்துவமனையில் சுதாகர் ரெட்டி சிகிச்சை பெற்றுவருவதாக எண்ணி அவரது குடும்பத்தினர் வந்துள்ளனர். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த சுதாகர் ரெட்டியின் உறவினர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர். அவரது கைரேகையை ஆதார் உள்ளிட்டவைகளுடன் ஒப்பிட்டு சோதித்து பார்த்தனர். சோதனையின் முடிவில் ராஜேஷ் என்பது தெரியவந்தது. விசாரணையில் நடத்தவற்றை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

காவல்துறை விசாரணையில் சுவாதி அளித்த பரபரப்புத் தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுதாகர் ரெட்டியை சுவாதி தனது காதலனுடன் சேர்ந்து கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி கொலை செய்துள்ளார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுதாகருக்கு மயக்க ஊசி போட்டி அவரை மயக்க மடைய செய்துள்ளனர். பின்னர் இரும்புகம்பியை கொண்டு தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர். சுதாகரின் சடலத்தை காரில் எடுத்துச்சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்துள்ளனர். தனது இல்லத்திற்கு வந்த சுவாதி காதலன் ராஜேஷ் மீது திராவகத்தை ஊற்றி முகத்தை சிதைத்துள்ளார். பின்னர் தனது கணவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட சுவாதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இல்லத்தில் புகுந்து கணவர் சுதாகர் ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுதாகர் ரெட்டியை (அதாவது ராஜேஷை) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சுதாகர் ரெட்டியின் சகோதரர் சுவாதி கூறியதை உண்மையென நம்பி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்களின் மகனால் உறவினர்களை சரியாக அடையாளம் காண முடியாததால் சந்தேகமடைந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரிடம் தெரிவித்த பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்த திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

சுதாகர் ரெட்டியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர். பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் சடலத்தை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சுவாதியை கைது செய்துள்ளனர். சிகிச்சை முடிந்த பின்னர் காதலன் ராஜேஷும் கைது செய்யப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com