அரசுக்கு ரூ.578 கோடி இழப்பு: இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு சம்மன்

அரசுக்கு ரூ.578 கோடி இழப்பு: இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு சம்மன்

அரசுக்கு ரூ.578 கோடி இழப்பு: இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு சம்மன்
Published on

ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 


இது தொடர்பான வழக்கில் மாதவன் நாயரும், 3 அதிகாரிகளும் டிசம்பர் 23ம் தேதி ஆஜராக நீதிபதி வீரேந்திர குமார் கோயல் உத்தரவிட்டுள்ளார்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவுக்கு விதிகளை மீறி குறைந்த விலையில் எஸ்-பாண்ட் அலைவரிசைகளை ஒதுக்கியது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் அரசுக்கு 578 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிபிஐ குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நடைமுறையில் சட்ட விதிமுறைகள் மீறியதாகவும், இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் எனவே, இதில் மாதவன் நாயர் உள்பட 4 விஞ்ஞானிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சி.பி.ஐ. கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 


இந்நிலையில், ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனக்கூறி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com