லாரி உரிமையாளர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு
பழைய வாகனங்களை விற்கும் போது ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில்
நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய வாகனங்களுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். வரும் 9ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணியிலிருந்து
10ஆம் தேதி இரவு மணி வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பின்
சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில், பழைய வாகனங்களை வாங்கும் போதும், விற்கும் போது ஜி.எஸ்.டி செலுத்த வேண்டியுள்ளதால் வாகன உரிமையாளர்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், பழைய வாகனங்களுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை
அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். கோரிக்கைகளை ஏற்க மறுத்தால், அடுத்தக்கட்டமாக
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.