“ஹனுமன் விளையாட்டு வீரர், அவர் சமூகத்தை ஆலோசிக்க வேண்டாம்” - சேட்டன் சவுகான்

“ஹனுமன் விளையாட்டு வீரர், அவர் சமூகத்தை ஆலோசிக்க வேண்டாம்” - சேட்டன் சவுகான்
“ஹனுமன் விளையாட்டு வீரர், அவர் சமூகத்தை ஆலோசிக்க வேண்டாம்” - சேட்டன் சவுகான்

கடவுள் ஹனுமன் ஒரு விளையாட்டு வீரர் என்பதால், அவரது சமூகம் குறித்து ஆலோசிக்க வேண்டாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஹனுமான் சமூகம் எது என்ற விவாதம் உத்தரப்பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுகான், “கடவுள் ஹனுமன் ஒரு விளையாட்டு வீரர் என்று நான் நம்புகிறேன். அவர் தனது எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டார். அனைத்து விளையாட்டு வீரர்களும் தேசத்திற்காக வெற்றிபெற தங்களுக்கு பலம் மற்றும் உற்சாகத்தை தருமாறு ஹனுமனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

தங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்ற எண்ணத்தில் யாரும் ஹனுமனை வணங்குவதில்லை. துறவிகளுக்கு சமூகம் என்பது கிடையாது. ஆன்மீகவாதிகளுக்கு சாதி என்பது கிடையாது. அதே வழியில் ஹனுமனுக்கும் சாதி என்பதில்லை என நாம் நம்புவோம். நான் அவரை கடவுளாக நினைக்கிறேன். அவர் அவரது சாதி என்ன என்பது தொடர்பாக எதுவும் பேசக்கூட விரும்பவில்லை” என்றார். 

முன்னதாக, 5 மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் பேசிய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ‘ஹனுமன் ஒரு காட்டுவாசி. அவர் ஒரு தலித். ராமனுக்கான கடமை முடியும்வரை ஓய்வின்றி உழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவர். அவரைப்போல வாக்காளர்களும் முடிவெடுக்க வேண்டும். ராம பக்தர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். ராவணனை பின்பற்றுபவர்கள் காங்கிரஸூக்கு வாக்களியுங்கள்’ என்றார். அவரது இந்த பேச்சு சர்ச்சையானது. ’சாதி ரீதியாக, தெய்வங்களையும் பாஜக பிரித்துவிட்டது’ என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்து ஹனுமன் சாதி என்ன? என்று பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com