வாக்குறுதியை நிறைவேற்றிய ராகுல்.. பெண் பார்க்கச் சொன்ன சோனியா காந்தி! வைரல் வீடியோ!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவரது தாயார் பெண் பார்க்கச் சொன்ன செய்தியைக் கேட்டு ஹரியானா பெண் விவசாயிகள் சிரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
priyanka, sonia, rahul
priyanka, sonia, rahultwitter

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், அவருடைய திருமணம் பற்றிய பேச்சுகள் அடிக்கடி எதிரொலித்து வருகின்றன. கடந்த 10ஆம் தேதி டெல்லியில் உள்ள கரோல்பாக் பகுதிக்குச் சென்ற ராகுல் காந்தியிடம் ஒருவர், ’எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்’ எனக் கேட்டார். அதற்கு அவர், ’என்றாவது ஒருநாள் திருமணம் செய்துகொள்வேன்’ எனப் பதிலளித்தார். அதுபோல், கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு முன்பாக ராகுலைச் சந்தித்த பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

rahul, lalui
rahul, laluitwiter

அப்போது பேசிய லாலு, ”நீங்கள் (ராகுல்) திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் அம்மா பேச்சை நீங்கள் கேட்பதில்லை என உங்கள் அம்மா என்னிடம் கூறினார். எங்கள் பேச்சை கேளுங்கள். திருமணத்தை உறுதி செய்யுங்கள்' என்றார். அப்போது அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, ’தற்போது நீங்களும் கூறிவிட்டீர்கள். அது விரைவில் நடக்கும்' என்றார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 8ஆம் தேதி ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள மதீனா என்ற கிராமத்துக்கு ராகுல் காந்தி சென்றார். அங்குள்ள விவசாயிகளுடன் உரையாடி நேரம் செலவளித்தார். அவர்களுடன் வயல்களில் வேலை செய்தார். அந்தப் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகின.

rahul
rahultwitter

அப்போது, விவசாயிகள் சிலர், ’தலைநகருக்கு மிக அருகில் தாங்கள் வசித்தாலும் இதுவரை டெல்லியை பார்த்ததில்லை’ என்று கூற, அதற்கு ராகுல், ’நிச்சயம் ஒருநாள் டெல்லிக்கு அழைக்கிறேன்’ வாக்குறுதி அளித்திருந்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அங்குள்ள விவசாயிகள் சிலரை, டெல்லியில் உள்ள தன் தாயார் சோனியா காந்தி வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் பெண் விவசாயிகள் சந்தித்து உரையாடுகின்றனர். அப்போது, ’ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று சோனியா காந்தியிடம் பெண் விவசாயி ஒருவர் கூறுகிறார். அதைக் கேட்ட சோனியா காந்தி நகைச்சுவையாக, 'நீங்களே பெண் பாருங்கள்" என்று கூறுகிறார்.

இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்கத் தொடங்குகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com