நடிகர் சன்னி தியோல், கவுதம் காம்பீர், ஸ்மிருதி முன்னிலை

நடிகர் சன்னி தியோல், கவுதம் காம்பீர், ஸ்மிருதி முன்னிலை
நடிகர் சன்னி தியோல், கவுதம் காம்பீர், ஸ்மிருதி முன்னிலை

பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் கவுதம் காம்பீர், ஸ்மிருதி இரானி, நடிகர் சன்னி தியோல் முன்னிலை வகிக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாஜக 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னிதியோல் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுனில் குமார் ஜக்கார் பின்னடைவு பெற்றுள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார் ஸ்மிருதி இரானி. கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியை விட முன்னிலை பெற்றுள்ளார்.

இதில் நடிகர் சன்னி தியோலும், கவுதம் காம்பீரும் சமீபத்தில்தான் பாஜகவில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com