மக்களவையில் நிறைவேறியது திருநங்கைகள் உரிமை மசோதா

மக்களவையில் நிறைவேறியது திருநங்கைகள் உரிமை மசோதா
மக்களவையில் நிறைவேறியது திருநங்கைகள் உரிமை மசோதா

திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேறியது.

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, திருநங்கைகள் பாதுகாப்பு தொடர்பாக தனி நபர் மசோதாவை மாநிலங்களவையில் கொண்டு வந்தார். இது அப்போது நிறைவேற்றப்பட்டது. பின்னர் அதே ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்த 27 ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு இந்த மசோதா திருத்தப்பட்டது. 

சமூக நீதி மற்றும் நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட், ‘திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2016’ என்ற இந்த சட்ட மசோதாவை அறிமுகம் செய்து நாடாளுமன்றத்தில் நேற்று பேசினார். 

திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி போன்றவை வழங்கவும், மத்திய, மாநில அரசுகள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றவும் இந்த சட்டம் வழிவகுக்கும் என்ற அவர், திருநங்கைகளை கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பதோ,

(தாவர் சந்த்)

அவர்கள் மீது உடல்ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ தாக்குதல் நடத்தினால் 2 வருட சிறை தண்டனை மற்றும் அபராத ம் விதிக்க இச்சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது என்றார்.

சில எம்.பி.க்களின் ஆட்சேபனையால் அமளிகளுக்கு இடையே, இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com