இந்தியா
முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது
முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது முத்தலாக் மசோதா ஆகும். இந்த மசோதா மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டு வாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.