”டீ வியாபாரம் செய்த ஒருவர் இன்று பிரதமராக இருக்கிறார்; ஆனால் எதிர்க்கட்சிகள்..” - அமித் ஷா பேச்சு

இந்த வருட மக்களவைத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி அரசியல் மற்றும் எதிர்க் கட்சிகளின் வாரிசு அரசியல் இடையிலான போட்டி என உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 அமித் ஷா
அமித் ஷாFile image

டெல்லி நிரூபர்: கணபதி சுப்ரமணியம்

டெல்லியில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் அமித் ஷா விரிவான உரை நிகழ்த்தினார். எதிர்க்கட்சிகளை 2ஜி, 3ஜி, 4ஜி என நையாண்டி செய்தார் அமித் ஷா. 2ஜி என்றால் இரண்டாம் தலைமுறை எனவும் 3ஜி என்றால் மூன்றாம் தலைமுறை எனவும் 4ஜி என்றால் நான்காம் தலைமுறை எனவும் எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் நடத்தி வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

Rahul Gandhi and modi
Rahul Gandhi and modiTwitter

பீகாரில் லாலுபிரசாத் யாதவ் தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார். உத்தரபிரதேசத்தில் முலயயம்சிங் யாதவ் தனது மகனை அரியணையில் அமர்த்திப் பார்த்ததாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க விரும்புகிறார். சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்குவதையே குறிக்கோளாக கொண்டுள்ளார். மம்தா பானர்ஜி தனது உறவினரை தனது வாரிசாக முதல்வர் பதவியில் அமர வைக்க விரும்புகிறார் என அபிஷேக் பானர்ஜி பெயரை குறிப்பிடாமல் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

அதே சமயம் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சிப் பாதையில் நாட்டை முன்னேற்றி செல்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சியே தனது குறிக்கோளாக கொண்டிருப்பதாகவும் அமித் ஷா புகழாரம் சூட்டினார். பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளதால் தான், தேநீர் வியாபாரம் செய்து வந்த ஒருவர் இன்று பிரதமராக இருக்கிறார். வாரிசு அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள், உட்கட்சி ஜனநாயகத்தையே வளர்க்காத நிலையில், அவர்கள் இந்திய ஜனநாயகத்துக்கு என்ன செய்யப் போகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.

mk stalin, pm modi, udhayanidhi stalin
mk stalin, pm modi, udhayanidhi stalinpt web

பத்து வருட காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. ஊழல்வாதிகள் தற்போது தங்களை காத்துக் கொள்ள கூட்டணி அமைத்துள்ளனர். "இந்தியா" கூட்டணி ஏழு வாரிசு அரசியல்வாதிகளின் கூட்டணி எனவும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com