’சார் இன்னும் லிஸ்ட் வரல’ | யார், யாருக்கு சீட்.. தாமதமாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

வேட்பாளர் அறிவிப்பு குறித்து டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலோசனையானது இரு தினங்களாக நடந்து வருகிறது.
காங்கிரஸ்
காங்கிரஸ்PT

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் தங்களதுவேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளார் பட்டியல் வெளியீட்டில் புதுச்சேரியை தவிர மற்ற இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தாமதத்திற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.

அரசியல் கட்சிகள், கூட்டணி கட்சிகள் அனைவரும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். நேற்றே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், புதுச்சேரிக்கு மட்டும் வேட்பாளராக வைத்தியலிங்கத்தை அறிவித்ததுடன், மீதமுள்ள 9 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் வேட்பாளர் அறிவிப்பு குறித்து டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலோசனையானது இரு தினங்களாக நடந்து வருகிறது. இதில் கடும் போட்டி நிலவுகிறது சொல்லப்படுகிறது. இதில் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐந்து வேட்பாளார் பெயர் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

வேட்பாளர்பட்டியலில் அடிபடும் பெயர்கள்

திருவள்ளூர் தொகுதிக்கு சசிகாந்த் செந்தில்,

மயிலாடுதுறை பிரவீன் சக்கரவர்த்தி அல்லது திருநாவுகரசு

திருவள்ளூரில் விஸ்வநாதன்

கிருஷ்ணகிரி செல்லக்குமார்

கடலூர் அழகிரி அல்லது ராஜேஷ்

கன்னியாகுமரி விஜய் வசந்த்

கரூர் ஜோதிமணி

விருதுநகர் மாணிக்கம் தாகூர்

சிவகங்கை கார்த்தி சிதம்பரம்

நெல்லை பீட்டர் அல்போன்ஸ் அல்லது ராமசுப்பு

என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com