விவசாயிகள் பிரச்னை: தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடக்கம்!

விவசாயிகள் பிரச்னை: தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடக்கம்!

விவசாயிகள் பிரச்னை: தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடக்கம்!
Published on

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது, நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை முதல் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்டதால் மக்களவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது,

இந்தச் சூழலில் மாலை 7 மணிக்கு கூடிய அவையை தொடர் அமளி காரணமாக நாளை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம்பிர்லா. மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் தொடர்முழக்கம் காரணமாக விவாதங்கள் நடத்த முடியாமல் முடங்கியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com