எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடியது முதலே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விவசாயிகள் பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். விவசாயிகள் பிரச்னையில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி அவைக்கு நடுவே வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட மக்களவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.