கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை பொது முடக்கம்
நாடு முழுவதும் ஜூன் 30 வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், பிரதமருடன் உள்துறை அமைச்சர் நடத்தி ஆலோசனையின் பிறகு பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 30 வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜூன் 8ஆம் தேதி முதல் 3 கட்டங்களாகத் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 8ஆம் தேதி முதல் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன. அன்று முதல் வழிபாட்டுத் தளங்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தளர்வுகளின் படி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அனுமதிகள் வழங்கப்படும், மூன்றாம் கட்ட தளர்வுகளின்படி, திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளம், மெட்ரோ ரயில் உள்ளிட்டவை திறக்கப்படும்.

