பீகாரில் ஜூன் 1 வரை பொது முடக்கம் நீட்டிப்பு

பீகாரில் ஜூன் 1 வரை பொது முடக்கம் நீட்டிப்பு
பீகாரில் ஜூன் 1 வரை பொது முடக்கம் நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பீகார் மாநிலத்தில் ஜூன் 1 ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் கொரோனா காரணமாக இதுவரை 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதவும் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இப்போது வரை 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீகார் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு அமலில் இருக்கும் பொது முடக்கத்தை ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தால் நல்ல பலன் கிடைத்துள்ளது. அதனால் பொதுமுடக்கம் ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த பொது முடக்க நாட்களில் அம்மாநிலத்தில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com