டெல்லி சிங்கு எல்லை: விவசாயிகளுக்கு எதிரான போராட்டத்தில் தள்ளுமுள்ளு - போலீஸ் தடியடி

டெல்லி சிங்கு எல்லை: விவசாயிகளுக்கு எதிரான போராட்டத்தில் தள்ளுமுள்ளு - போலீஸ் தடியடி
டெல்லி சிங்கு எல்லை: விவசாயிகளுக்கு எதிரான போராட்டத்தில் தள்ளுமுள்ளு - போலீஸ் தடியடி

டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு எதிரான போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்து வருகின்றனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் 64 ஆவது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில், டெல்லியில் பஞ்சாப் - ஹரியானா எல்லையான சிங்கு பகுதியில், விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் கூடாரம் அமைத்து 2 மாதங்களுக்கும் மேல் தங்கி போராட்டம் நடத்துவதால், தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, விவசாயிகளுக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே, தங்கள் பகுதியில் தங்கியிருந்து போராடும் விவசாயிகள், அங்கிருந்து காலி செய்யுமாறு வலியுறுத்தி, சாலையில் திரண்டு பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கற்களைக் கொண்டு தாக்கும் அளவிற்கு போராட்டகளத்தில் வன்முறை வெடித்தது. எனவே அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தடியடி நடத்தியும், சில இடங்களில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் வன்முறையை கலைத்துவருகின்றனர்.

மேலும், உள்ளூர் பொதுமக்களை தங்கள் வீடுகளுக்கு திரும்பிப் போகும்படியும், விவசாயிகளை அமைதியாக போராடவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com