இந்தியா
மதிய உணவில் பல்லி....பள்ளிக் குழந்தைகள் மயக்கம்
மதிய உணவில் பல்லி....பள்ளிக் குழந்தைகள் மயக்கம்
பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பல்லி இறந்து கிடந்த உணவை மாணவிகள் சாப்பிட்டதால் தான் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.