\
டெல்லி-ஹவுரா ரயிலில் விநியோகிக்கப்பட்ட உணவில் ’பல்லி’

டெல்லி-ஹவுரா ரயிலில் விநியோகிக்கப்பட்ட உணவில் ’பல்லி’

டெல்லி-ஹவுரா ரயிலில் விநியோகிக்கப்பட்ட உணவில் ’பல்லி’
Published on

ஹவ்ரா-டெல்லி இடையேயான பூர்வா விரைவு ரயிலில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பூர்வா விரைவு ரயிலில் குளிர்சாதனப்பெட்டியில் பயணம் செய்த பயணி ஒரு‌வர் ஐ.ஆர்.சி.டி.சியால் தயாரிக்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணியை வாங்கியுள்ளார். அதில் பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு ட்விட்டர் மூலம் புகார் அளித்தார். இதையடுத்து உடனடியாக இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டார். அண்மையில் மத்திய கணக்கு தணிக்கைத்துறை வெளியிட்ட அறிக்கையில், ரயில்களில் வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com