தமிழ்நாட்டில் லிவ்-இன் வாழ்க்கை ஜார்க்கண்ட்டில் கொலை! காதலியை 40 துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம்!
அது ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம். அங்குள்ள ஜோர்டாக் என்ற கிராமத்தில் உள்ளது அந்த அடர்ந்த வனப்பகுதி. அப்பகுதியின் அருகே உள்ள கிராமத்திற்கு வந்த நாயை கூர்ந்து கவனித்த மக்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.. அந்த நாய் தன் வாயில் மாமிசத் துண்டை கவ்வி வந்துள்ளது. ஆனால் அது மிருக மாமிசம் அல்ல மனித மாமிசம்.. பதறிப்போன மக்கள் உடனடியாகக் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நாயின் வாயில் இருந்தது மனிதனின் உடல் உறுப்புதான் என்பதை உறுது செய்து எங்கிருந்து எடுத்து வந்திருக்கும் என்று யூகத்தின் பேரில் தேடத் தொடங்கியுள்ளனர். அப்படி அருகில் இருந்த அந்த வனப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தபோது 40க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டப்பட்டு ஒரு பெண்ணின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அருகிலேயே ஒரு பை ஒன்று கிடந்துள்ளது. அப்பையை ஆராய்ச்சி செய்ததில் அதில் ஒரு பெண்ணின் ஆதார் கார்டுடன் சில உடைமைகளும் இருந்துள்ளது.
உடனடியாக ஆதார்கார்டை வைத்து அப்பெண்ணின் தாயைத் தொடர்புகொண்ட காவல்துறையினர் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து அவரை அடையாளம் காணக் கேட்டுள்ளனர். அப்பெண்ணின் உடலையும் உடைமைகளும் பார்த்த அந்தத் தாய் அது தன்னுடைய மகள்தான் என்பதை உறுதிசெய்துள்ளார். உடனடியாக தாயிடம் அவர் எப்போது கடைசியாகப் பேசினார்? வேறு யார் மீதும் சந்தேகம் உள்ளதா என விசாரணை நடத்தியுள்ளானர். அப்போது அவர் கூறிய பதிகளே கொலையாளியைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தைச் சேர்தவர் நரேஷ் பங்ரா. அவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வந்துள்ளார். அதே மாவட்டத்தை சேர்ந்த கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் நரேஷிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் லிவின் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென தமிழ்நாட்டில் இருந்து ஜார்க்கண்ட் சென்ற நரேஷ் அங்கு தனது வீட்டார் பார்த்து வைத்திருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல மனைவியை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களாக அவரது காதலி தன்னை ஜார்க்கண்ட் அழைத்துச் சென்று நரேஷின் குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்து வைக்கும்படியும் விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் வற்புறுத்தி வந்துள்ளார். அதன்படி நவம்பர் 8 ஆம் தேதி இருவரும் ரயில் மூலம் குந்தி மாவட்டத்துக்குச் சென்றுள்ளனர். ஆனால், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றால் தனக்கு திருமணம் ஆனது தெரிந்து பெரிய பிரச்சனை ஆகும் என்று எண்ணிய நரேஷ் அவரை ஜோர்டாக் வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரைக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு நரேஷ் மட்டும் தனியே வீடிற்குச் சென்றுள்ளார். இந்த சமையத்தில்தான் தன் தனது காதலனுடன் ஜார்க்கண்ட் வந்துள்ளதையும் காதலனின் வீட்டிற்குச் செல்லவிருப்பதாகவும் தனது தாயிடம் அழைத்துக் கூறியுள்ளார் அப்பெண். இந்நிலையில் வீட்டிற்குச் சென்ற நரேஷ் கறி வெட்டும் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதத்துடன் திரும்பி வந்துள்ளார்.
பின்னர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் அப்பெண்ணின் உடலை 40க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி காட்டுப் பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். அவரது தாய் கொடுத்த தகவலின் பேரில் நரேஷைக் கைது செய்து விசாரணை நடத்தியல் இவ்வுண்மை தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரைக் கைதுசெய்த காவதுறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.